திருச்சியில் “மியாவாகி” முறையில் அடர்காடுகளை உருவாக்கும் திட்டத்தை மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
திருச்சி மாநகராட்சி சார்பில் “மியாவாகி” முறையில் அடர்காடு உருவாக்கும் திட்டம் ஸ்ரீரங்கம் பகுதியில் தொடங்கியது. ஸ்ரீரங்கம் கோவில் அருகே உள்ள நந்தவனத்தில், 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியை, மாநகராட்சி ஆணையர் தொடங்கி வைத்தார். 5,027 சதுர மீட்டர் பரப்பளவுள்ள ஸ்ரீரங்கம் ரெங்கநாத சுவாமி திருக்கோவில் இடத்தில், ஆழ்குழாய்க் கிணறு அமைத்து நீர்ப் பாசனத்துடன் மரக்கன்றுகள் நடப்பட்டன. கல்லூரி மாணவ, மாணவிகள், குடியிருப்பு நலசங்கத்தினர், மாநகராட்சி பணியாளர்கள் என சுமார் 600க்கும் மேற்பட்டோரை கொண்டு இந்த மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது.
Discussion about this post