வெளிமாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 3 ஆயிரத்து 360 மதுபாட்டில்களை விழுப்புரத்தில் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
வெளிமாநில மது கடத்தல் மற்றும் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க விழுப்புரம் மாவட்ட காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன்படி, பனையபுரம் சோதனைச் சாவடியில் மதுவிலக்கு பிரிவு காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியை சோதனை செய்த போது, அதில் அனுமதியின்றி 3 ஆயிரத்து 360 வெளிமாநில மதுபாட்டில்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. பின்னர் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தப்பியோடிய ஓட்டுநரை தேடி வருகின்றனர்.
Discussion about this post