குடியுரிமை சட்ட நகலை கிழித்து, சாலை மறியலில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை சைதாப்பேட்டையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, குடியுரிமை சட்ட திருத்த நகலை உதயநிதி ஸ்டாலின் கிழித்து எறிந்தார். பின்னர் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையில் போராட்டத்திலும் ஈடுபட்டார். அப்போது, காவல்துறையினர் உதயநிதி ஸ்டாலினை தடுத்து நிறுத்திய போது, அவர்களிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து கைது செய்யப்பட்ட அவர், பின்னர் விடுதலை செய்யப்பட்டார். இந்தநிலையில், உதயநிதி ஸ்டாலின் மீது குடியுரிமை சட்ட நகலை கிழித்து, சாலை மறியலில் ஈடுபட்டதாக, சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Discussion about this post