சென்னையில் அண்ணாநகர், சாந்தி காலனி பகுதியில் சாலை ஓரங்களில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களை போக்குவரத்து காவல்துறையினர் அகற்றிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
அண்ணாநகர், சாந்தி காலனி பகுதியில் சாலையின் இரு புறங்களிலும், நடை மேடைகளிலும் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் அனுமதி இன்றி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நிறுத்தி வைத்துள்ளதாக காவல்துறையினருக்கு புகார்கள் வந்தது. இதனையடுத்து, சாலையில் நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனங்களுக்கு 100 ரூபாய் முதல் 160 ரூபாய் வரை அபராதமும், கார்களுக்கு 275 ரூபாய் முதல் 375 ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்பட்டு, வாகனங்கள் அகற்றப்பட்டது.
போக்குவரத்திற்கும், சாலையில் நடந்து செல்பவர்களுக்கும் இடையூராக இருந்த வாகனங்களை அகற்றி இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், மக்களின் நலன் கருதி சிறப்பாக செயல்பட்ட காவல்துறைக்கு நன்றிகளையும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
Discussion about this post