திண்டுக்கல்லில் உள்ள வெங்காய சந்தையில் குடிமைப்பொருள் வழங்கல் பிரிவு புலனாய்வு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
நாடு முழுவதும் வெங்காய தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், தமிழகத்தில் ஒரு கிலோ வெங்காயம் 200 ரூபாய் வரை விற்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் மொத்த வெங்காய வியாபாரிகள், 5 மெட்ரிக் டன்னுக்கு மேல் வியாபாரத்திற்கு வைத்திருக்கக் கூடாது எனவும், சில்லரை வியாபாரிகள் 1 மெட்ரிக் டன்னுக்கு மேல் வைத்திருக்கக் கூடாது எனவும் மத்திய, மாநில அரசுகள் உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து திண்டுக்கல்லில் உள்ள வெங்காய சந்தையில் அனைத்து கடைகளிலும், வெங்காயம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு சார்பு ஆய்வாளர் தலைமையில் காவல்துறையினர் சோதனை நடத்தினர்.
Discussion about this post