நீலகிரி மலை ரயிலை வாடகைக்கு எடுத்து, அதில் பயணம் செய்ய வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் அம்சங்களில் ஊட்டி மலை ரயில் முக்கிய இடம் பெறுகிறது. குன்னூரில் இருந்து ஊட்டி வரை 18 கிலோ மீட்டர் கொண்ட இந்த மலை ரயில் பாதையின் இரு புறங்களிலும், அழகிய இயற்கை காட்சிகள் காணப்படுகின்றன. பாரம்பரியமிக்க மலை ரயிலில் பயணம் செய்ய சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ரஷ்யா, அர்ஜென்டினா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 64 பேர் கொண்ட குழுவினர், 3 லட்ச ருபாய் கட்டணம் செலுத்தி மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை பயணம் செய்து மகிழ்ந்தனர்.
Discussion about this post