புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறபித்துள்ளது.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் டிசம்பர் 27 மற்றும் 30-ம் தேதிகளில் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
தமிழகத்தில் புதிதாக 9 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு இருப்பதாலும் , தொகுதி வரையறை பணிகள் சரிவர நடைபெறாமல் இருப்பதாலும் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க வேண்டுமென திமுக சார்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது, உள்ளாட்சித் தேர்தலுக்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கில் இன்று காலை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
நேற்று இவ்வழக்கு தொடர்பான விசாரனையின் போது, புதிதாகப் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர, மற்ற மாவட்டங்களில் தேர்தல் நடத்தலாம் என நீதிமன்றம் கருத்துத் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறபித்துள்ளது.
Discussion about this post