திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே 516 ஏக்கர் பரப்பளவிலான ஏரி, குடிமராமத்து பணியின் கீழ் தூர்வாரப்பட்டதால், ஏரி நிரம்பியுள்ளது.
கொளத்தூர் கிராமத்தில் 516 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஏரியின் மூலம் 600 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் புதர் மண்டி கிடந்த இந்த ஏரியில், முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 29 லட்ச ரூபாய் மதிப்பில் முட்புதர்கள் நீக்குதல், ஏரிக் கரையை பலப்படுத்துதல், கால்வாய்களை தூர்வாருதல், போன்ற பல்வேறு பணிகள் நடைபெற்றது. சீரமைக்கப்பட்ட இந்த ஏரியில், தற்போது பெய்து வரும் பருவமழையால் நீர் நிரம்பி காணப்படுகிறது. நீர்வரத்து தடையின்றி ஏரியை சென்றடைய வழிவகை செய்த அரசுக்கு அப்பகுதி விவசாயிகள் நன்றி தெரிவித்தனர். இதேபோல் வேட்டவலத்தில் சுமார் 175 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியும் தூர்வாரப்பட்டதால் அங்கும் மழை நீர் நிரம்பியது.
Discussion about this post