சென்னையில் தொடர் மழை பெய்து வரும் நிலையில் மழைநீர் தேங்கியுள்ள இடங்களுக்கு நேரில் சென்று காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழை நீர் தேங்கக் கூடிய இடமாக கருதப்படும் பகுதிகள் மற்றும் கெங்குரெட்டி சுரங்கப் பாதையை ஆகிய இடங்களில் மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து துறை அதிகாரிகளும், தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தார்
Discussion about this post