கடலூரில் இரவு முழுவதும் பெய்த கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில், பச்சிளம் குழந்தை உட்பட 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம், திருப்பாதிபுலியூரில் இரவு முழுவதும் கனமழை பெய்தது. அப்போது, நாராயணன் என்பவர் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலை அடுத்து விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் வீட்டில் இருந்த பச்சிளம் குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். இடிபாடுகளில் சிக்கி இருந்த மேலும் 3 பேரை மீட்டு கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு தீயணைப்புத்துறையினர் அனுப்பி வைத்தனர்.
Discussion about this post