விழுப்புரத்தில் அரசு சட்டக் கல்லூரி, எம்.ஜி.ஆர். அரசு கலை அறிவியல் கல்லூரிக்கு கட்டப்பட்ட புதிய கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
விழுப்புரத்தில் அரசு சட்டக் கல்லூரி மற்றும் எம்.ஜி.ஆர். அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கு புதிய கட்டடங்களை கட்டித்தரவேண்டும் என்ற பொது மக்களின் நீண்டகால கோரிக்கையை பரிசீலித்த தமிழக அரசு, 70.59 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிய கட்டடங்களை கட்டுவதற்கு நிதி ஒதுக்கியது. அதன் படி கட்டி முடிக்கப்பட்ட, கல்லூரிகளின் புதிய கட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். இந்த விழாவில், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழுப்புரத்தில் பூந்தோட்டம் குளம் சீரமைப்பு மற்றும் பூங்காவுடன் கூடிய நடைபாதை அமைக்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். 2 புள்ளி 39 ஏக்கர் பரப்பளவில், குளம் தூர்வாருதல், நீர்வரத்து கால்வாய் சீரமைத்தல், பசுமை பூங்கா, அதன் சுற்று சுவர், மற்றும் நவீன இருக்கைகள் சுமார் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளன. இதன் பணிகள் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post