மகாராஷ்டிரத்தில் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸுக்கு ஆளுநார் பகத்சிங் கோஷியாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்ததற்கு எதிராக, சிவசேனை-தேசியவாத காங்கிரஸ் – காங்கிரஸ் கூட்டணி தாக்கல் செய்த மனு மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது.
மகாராஷ்டிர அரசியலில் எதிர்பாராத திருப்பமாக, பாஜகவைச் சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸை முதல்வராகவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித் பவாரை துணை முதல்வராகவும் ஆளுநர் பகத்சிங் கோஷியாரி கடந்த 23ஆம் தேதி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சிவசேனை-என்சிபி-காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து ஆட்சியமைக்க தீர்மானித்திருந்த நிலையில், பாஜகவுக்கு ஆதரவாக அஜித் பவார் மேற்கொண்ட முடிவு அந்தக் கூட்டணிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தேவேந்திர பட்னாவிஸுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்த ஆளுநர் பகத்சிங் கோஷியாரியின் நடவடிக்கைக்கு எதிராக 3 கட்சிகளும் உச்சநீதிமன்றத்தில் கூட்டாக மனு தாக்கல் செய்தன. அந்த மனுவை நீதிபதிகள்,தேவேந்திர பட்னவிஸுக்கு அழைப்பு விடுத்து ஆளுநர் அனுப்பிய கடிதம், ஆட்சியமைக்க உரிமை கோரி ஆளுநரிடம் பட்னவிஸ் சமர்ப்பித்த கடிதம் ஆகியவற்றை மத்திய அரசு சமர்ப்பிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தது.
உத்தரவின்படி இரு கடிதங்களையும் அரசு வழக்கறிஞர் துசார் மேத்தா, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். ஆளுநரின் அதிகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும், இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டிய தேவையில்லை எனவும் துசார் மேத்தா வாதிட்டார். மூத்த உறுப்பினரை அவைத் தலைவராக நியமித்து வீடியோ பதிவுடன் 24 மணி நேரத்துக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த உத்தரவிட வேண்டும் என எதிர்க்கட்சிகளின் வழக்கறிஞர் கபில் சிபல் வாதிட்டார். பாஜக சார்பில் ஆஜரான முகுல் ரோகத்கி, குறித்த நேரத்துக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது எனக் குறிப்பிட்டார். அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தீர்ப்பை ஒத்தி வைத்தனர். அதன்படி இன்று காலை மகராஷ்டிரா விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
மகாராஷ்டிராவில் தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சி மீது நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு.மேலும் வாக்கு சீட்டு முறையில் மாலை 5 மணிக்கு சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஏதுவாக இடைக்கால சபாநாயகரை இன்று மாலைக்குள் நியமிக்க வேண்டும்.நம்பிக்கை வாக்கெடுப்பை தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவு.
Discussion about this post