பாஜகவின் ஆதரவாலேயே சிவசேனா வேட்பாளர்கள் வெற்றிபெற்றதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரத்தில் பாஜக ஆட்சி அமைத்தது குறித்து மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் டெல்லியில் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார். அதில், சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது தேவேந்திர பட்னாவிஸ்தான் முதலமைச்சர் எனத் தெரிவிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார். பாஜகவுக்கு உள்ள தொண்டர் பலம், முதலமைச்சராகத் தேவேந்திர பட்னாவிசை முன்னிறுத்தியது ஆகியவையே சிவசேனா வேட்பாளர்கள் வெற்றிபெற்றதற்குக் காரணம் எனவும் அவர் தெரிவித்தார்.
நாட்டின் மிகப்பெரிய மாநிலம் மகாராஷ்டிரம் என்பதாலும், நிதித்துறைத் தலைநகராக மும்பை விளங்குவதாலும் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகியவை இணைந்து புறவாசல் வழியாக ஆட்சியைக் கைப்பற்ற முயல்வதாக ரவிசங்கர் பிரசாத் குற்றஞ்சாட்டினார். அந்த முயற்சியை முறியடிக்கவே தனிப்பெரும் கட்சியான பாஜக ஆட்சியமைத்ததாகவும் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.
Discussion about this post