விழுப்புரத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கட்டப்பட்டுள்ள 11 நீதிமன்றத்திற்கான புதிய கட்டிடத்தை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தார்.
நீதிமன்ற வளாகத்தில் 23 கோடியே 50 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வந்த ஒருங்கிணைந்த இணைப்பு நீதிமன்ற கட்டிடத்தின் திறப்பு விழா நடைபெற்றது. இதில் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் கலந்துகொண்டு குத்து விளக்கேற்றி நீதிமன்றத்தை திறந்து வைத்தனர்.
அதனை தொடர்ந்து நீதிமன்ற வழக்காடு அறைகள், கூடுதல் கட்டிடங்கள், வழக்கறிஞர்கள் அறைகள் ஆகியவைகளை பார்வையிட்டனர். விழாவில் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், நீதித்துறைக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை அதிமுக அரசு சிறப்பாக செய்து கொடுத்திருப்பதாக தெரிவித்தார்.
Discussion about this post