கோபிசெட்டிபாளையத்தில் கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக 29 கிலோ மீட்டருக்கு குழாய் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் இருந்து பெருந்துறை தொகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகளுக்காக, 110 விதியின் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 240 கோடி ரூபாய் ஒதுக்கி பணிகளை தொடங்க உத்தரவிட்டார். இதையடுத்து, 29 கிலோ மீட்டர் தூரத்திற்கு குழாய்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை 50 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், மீதமுள்ள பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தின் முலம் பெருந்துறை தொகுதி முழுவதும் உள்ள 8 பேரூராட்சிகள் மற்றும் 72 ஊராட்சிகளில் உள்ள குக்கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்பதால் அப்பகுதி மக்கள் தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
Discussion about this post