விழுப்புரத்தில் உள்ள சட்டக்கல்லூரிக்கான புதிய கட்டிடங்கள் கட்டும் பணிகளை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நேரில் ஆய்வு செய்தார்.
விழுப்புரம் திரு.வி.க வீதியில் உள்ள சட்டக்கல்லூரிக்காக சாலாமேடு பகுதியில் புதிய கட்டிடங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. சுமார் 5.5 ஏக்கர் பரப்பளவில் 69 கோடி மதிப்பீட்டில் இந்த கட்டிடங்கள் கட்டப்படுகிறது. தற்போது 99 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர். இதனையடுத்து பணிகள் நிறைவடைந்தவுடன் அடுத்த வாரம், முதலமைச்சர் இந்த சட்ட கல்லூரியின் புதிய கட்டிடத்தினை திறந்து வைக்க உள்ளார்.
Discussion about this post