அரசு துறைகளில் முறைகேடுகள் நடைபெறாமல் இருக்க புதுமையான வழிமுறைகளை உருவாக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில், தலைமை கணக்குத் தணிக்கைத் துறை அலுவலகம் சார்பில் நடைபெற்ற மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, அரசு துறைகளில் முறைகேடுகள் நடைபெறாமல் இருக்க புதுமையான வழிமுறைகளை உருவாக்க வேண்டும் என கணக்குத் தணிக்கை அலுவலர்களிடம் வலியுறுத்தினார். வரும் 2022ஆம் ஆண்டிற்குள் நாட்டின் பொருளாதாரத்தை 350 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கு கணக்குத் தணிக்கைத் துறையின் பங்கு முக்கியமானதாக இருக்கும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார். அரசு துறைகளில் ஊழல் நடைபெறாமல் இருக்க புதுமையான வழிமுறைகள் கண்டறிய கட்டாயத்தில் நாடு உள்ளதாக தெரிவித்த பிரதமர் மோடி, அரசு நிர்வாகத்தை மேம்படுத்த அனைவரும் ஒன்று இணைந்து செயலாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
Discussion about this post