நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் அமலில் உள்ள 144 தடை உத்தரவை மேலும் 9 நாட்களுக்கு நீட்டித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
விநாயகர் சதுர்த்தியின் போது, செங்கோட்டை,தென்காசி பகுதிகளில் இருபிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. போலீசார் எடுத்த தொடர் நடவடிக்கை காரணமாக தென்காசி, செங்கோட்டையில் முழு அமைதி திரும்பி உள்ளது.
9 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுக் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் அமலில் உள்ள தடை உத்தரவை 30-ஆம் தேதி வரை நீட்டித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
Discussion about this post