அரியலூர் அருகே, 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த விநாயகர் சிலையை, மர்ம நபர்கள் திருடிச் சென்றது, அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள இராயம்புரம் கிராமத்தில், ஏரிக்கரையில் சுமார் 200 ஆண்டுகள் பழமையான விநாயகர் சிலை உள்ளது. இந்த விநாயகரை தினமும் அப்பகுதி பொதுமக்கள் வழிப்பட்டு வந்தனர். இந்நிலையில், ஆலாங்குளம் ஏரிக்கு தண்ணீர் பிடிப்பதற்காக சென்ற பொதுமக்கள், அங்கு விநாயகர் சிலை இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். விநாயகர் இருந்த இடத்தில், மர்ம நபர்கள் சுண்டல், பழங்கள் என, பூஜைக்கு வேண்டிய பொருட்களை வைத்து படையலிட்டு, நூதன முறையில் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்த தகவலையடுத்து, செந்துறை காவல்துறையினர், சிலையை திருடியவர்களை தேடி வருகின்றனர்.
Discussion about this post