தாய்லாந்தில் ஆசியான் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்றுள்ள அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் தாரோ கோனோவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
தென்கிழக்காசிய நாடுகளின் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் மாநாடு தாய்லாந்தின் பாங்காக் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ள இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜப்பான் பாதுகாப்புத்துறை அமைச்சர் தாரோ கோனோவைச் சந்தித்தார். அப்போது பாதுகாப்புத் துறையில் இரு நாடுகளிடையே உள்ள ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருவரும் பேச்சு நடத்தியதாகக் கூறப்படுகிறது. பாங்காக்கில் நடைபெறும் பாதுகாப்புத் தளவாடக் கண்காட்சியின் தொடக்க விழாவிலும் ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார்.
Discussion about this post