காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரசுடன் இணைந்து செயல்படுவோம் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆட்சி அமைக்க ஆளுநரிடம் இருந்து அழைப்பு வந்த போது, 48 மணி நேரம் அவகாசம் கேட்டதாக கூறினார். தங்களது கோரிக்கையை ஆளுநர் நிராகரித்து, தற்போது குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தி விட்டதாக உத்தவ் தாக்கரே குற்றம்சாட்டினார்.
இத்தனை ஆண்டுகளாக தொடர்ந்து வந்த பாஜக – சிவசேனா கூட்டணி தற்போது முறிந்து விட்டதாக உத்தவ் தாக்கரே தெரிவித்தார். தற்போது காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் உடன் இணைந்து செயல்பட உள்ளதாக உத்தவ் தாக்கரே கூறினார். இரண்டு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்த அவர், மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அரவிந்த் சாவந்திற்கு நன்றி கூறினார்.
செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த உத்தவ் தாக்கரே, பாஜகவுடனான உறவு நிரந்தரமாக முடிந்து விடவில்லை என்றும், கதவு திறந்தே இருப்பதாகவும் சூசகமாக கூறினார்.
Discussion about this post