காங்கிரஸ் கட்சியுடன் பேச்சு நடத்திய பின்னரே சிவசேனாவை ஆதரிப்பது பற்றி முடிவெடுக்கப்படும் எனத் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.
பாஜகவுடனான கூட்டணியை சிவசேனா கட்சி முறித்துக் கொண்டதை அடுத்து மத்திய அரசில் இடம்பெற்றிருந்த சிவசேனாவின் அரவிந்த் சாவந்த் அமைச்சர் பதவியில் இருந்து விலகினார்.
இந்நிலையில் மகாராஷ்டிரத்தில் ஆட்சியமைக்க சிவசேனாவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து விவாதிப்பதற்காக மும்பையில் சரத்பவார் வீட்டில் தேசியவாத காங்கிரஸ் உயர்நிலைக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் சரத்பவார், அவர் மகள் சுப்ரியா சூலே, பிரபுல் பட்டேல், அஜித் பவார், ஜெயந்த் பாட்டீல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அதன்பின் பேசிய சரத்பவார், காங்கிரஸ் கட்சியுடன் பேச்சு நடத்திய பின்னரே சிவசேனாவை ஆதரிப்பது பற்றி முடிவெடுக்க முடியும் எனத் தெரிவித்தார்.
Discussion about this post