விருத்தாசலத்தில் சாலையோரம் கிடக்கும் தாவர கழிவுகளை கொண்டு எவ்வித செலவில்லாமல் மண்புழு தயாரிக்கும் இயற்கை விவசாயி அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறார்.
விருத்தாச்சலம் புறவழி சாலை மற்றும் கிராமப்புற சாலைகளில், விவசாயிகள் தங்கள் விவசாய விளை பொருட்களான நெல், கம்பு, எள், உளுந்து உள்ளிட்டவைகளை உலர்த்துவதற்காக காய வைக்கின்றனர். விளை பொருட்கள் உலர்ந்த பின்னர் மீதமுள்ள தாவர கழிவுகளை சாலையோரம் ஒதுக்கி விட்டு விட்டு சென்று விடுகின்றனர். இந்நிலையில் சாலையோரம் கிடக்கும் தாவர கழிவுகளை எடுத்து சென்று தனது வயலில் நிழல் பாங்கான பகுதியில் குவித்து உரமாக மாற்றி வருகிறார் விவசாயி ஒருவர். தாவர கழிவுகளில் எவ்வித ரசாயன பொருட்களும் கலக்காமல், தண்ணீரை மட்டும் தெளித்து வருவதால், அதிக சத்து நிறைந்த மண்புழு உரமாக அவருக்கு கிடைக்கிறது. ஒரு கிலோ மண்புழு உரம் ஏழு ரூபாய்க்கு விற்கப்படும் சூழ்நிலையில், எவ்வித செலவு இல்லாமல் தாவர கழிவுகளை கொண்டு இயற்கை உரத்தை பெறும் விவசாயி சிவக்குமாரின் முயற்சி அனைவரின் பாராட்டினையும் பெற்று வருகிறது.
Discussion about this post