தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் வரவிருக்கும் நிலையில் அதை எவ்வாறு எதிர்கொள்வது, வெற்றிபெறப் பின்பற்ற வேண்டிய உத்திகள் ஆகியவற்றைப் பற்றி விரிவாக விவாதிப்பதற்காக வரும் 6 ஆம் தேதி சென்னையில் அதிமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
முதலமைச்சரும் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சரும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
Discussion about this post