காவிரி ஆணைய அனுமதி இன்றி கர்நாடகம் காவிரியின் குறுக்கே புதிய அணை கட்ட முடியாது காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுப்பணித்துறை திருச்சி மண்டல அலுவலகத்தில், காவிரி ஒழுங்காற்று குழு தலைவரும், மத்திய நீர்வளத்துறை செயலாளருமான நவீன்குமார் தலைமையில், 19 ஆவது காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் நடைபெற்றது. இதுவரை டெல்லி, பெங்களூருவில் நடைபெற்று வந்த இந்த கூட்டமானது, முதல் முறையாக தமிழ்நாட்டில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழக பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய நான்கு மாநில பொதுப்பணித்துறை உயரதிகாரிகள், காவிரி தொழில்நுட்பக் குழுவினர் என 16 பேர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய தண்ணீர், பருவ மழைப் பொழிவு, அணைகளின் நீர் இருப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஒழுங்காற்று குழு தலைவர் நவீன்குமார், காவிரியில் தமிழகத்துக்கு உரிய நீரை கர்நாடக திறந்து விட்டு இருப்பதாக கூறினார். காவிரி ஆணைய அனுமதி இன்றி கர்நாடகம் காவிரியின் குறுக்கே புதிய அணை கட்ட முடியாது என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
Discussion about this post