தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் போடப்பட்டு, பயன்படாத நிலைக்கு மாறிய ஆழ்துளை கிணறுகள், திறந்த வெளிக் கிணறுகள், நீர் உறிஞ்சுக் கிணறுகள் ஆகியவற்றை 24 மணி நேரத்தில் மழை நீர் சேகரிப்புக் கட்டமைப்பாக மாற்ற, குடிநீர் வடிகால் வாரியம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் போடப்பட்ட ஆழ்துளை கிணறு, திறந்தவெளிக் கிணறு ஆகியவை செயல்படாமல் இருந்தால், அவை பொது மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என்பதாலும், இதில் குழந்தைகள், ஆடு, மாடு ஆகியவை விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதாலும், அவற்றை 24 மணி நேரத்தில் மூட வேண்டும் என குடிநீர் வடிகால் வாரியம் உத்தரவிட்டுள்ளது. தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட வாரிய அதிகாரிகள் மீடு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே போன்று, பொது மக்கள், தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர், இயங்காத மற்றும் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணற்றை மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புக்களாக மாற்றுவதற்கு எந்த வகையான தொழில் நுட்ப உதவியையும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக 24 மணி நேரமும் அவசர தகவல்களை பெற 9445802145 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post