தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் கந்த சஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் கோலாகலமாக தொடங்கிய விழாவின் ஏற்பாடுகள் குறித்து செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தர இருப்பதால், 4 தற்காலிக பேருந்து நிலையத்தையும், தடையின்றி செல்போன் சேவை தொடர்வதற்காக, கூடுதலாக செல்போன் கோபுரங்கள் அமைக்கப்பட இருப்பதாகவும் தெரிவித்தார்.
Discussion about this post