காஷ்மீரில் இன்று 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் இன்று மொகரம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்திய எல்லையான காஷ்மீர் பகுதியில் பதற்றமான சூழல் இருந்து வரும் நிலையில், தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருக்கக்கூடும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதேபோல், காஷ்மீர் பகுதியில் மொகரம் ஊர்வலங்களைக் கட்டுப்படுத்தும் வகையில், காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, அங்குள்ள கல்வி நிறுவனங்களும் தற்போது மூடப்பட்டுள்ளன. இவற்றுடன் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்டவையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டுள்ளன. குறிப்பாக, பதற்றம் நிறைந்த சில முக்கிய சாலைகளில் வாகனங்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post