தீபாவளியை முன்னிட்டு செஞ்சி வார சந்தையில் நான்கு மணி நேரத்தில் 5 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் பிரசித்தி பெற்ற ஆடு, மாடு மற்றும் கோழிகள் விற்கும் வாரசந்தை இயங்கி வருகிறது. இங்கு 250 க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகள் தங்கள் வளர்க்கும் கோழி, ஆடு, மாடுகளை வெள்ளிக்கிழமை தோறும் வாரச்சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை
செய்வது வழக்கம். இந்நிலையில் எதிர்வரும் தீபாவளி பண்டிகையையொட்டி ஆடு விற்பனை, எதிர்பார்த்ததை விட அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. சுமார் 5 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை ஆகியுள்ளதாக விற்பனையாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இன்று நடைபெற்ற வாரச் சந்தையில் மட்டும் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனை ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post