புதுச்சேரி காமராஜ் நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் ஏழாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
புதுச்சேரி காமராஜ் நகர் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஜான்குமாரும், என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் புவனேஸ்வரனும் போட்டியிட்டனர். தேர்தலில் பதிவான வாக்குகள் முழுவதும் எண்ணி முடிக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் 14 ஆயிரத்து 782 வாக்குகள் பெற்றுள்ளார்.
என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரன் 7 ஆயிரத்து 611 வாக்குகள் பெற்றார். இதனால் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் ஏழாயிரத்து 171 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post