ஒரு நாள் பயணமாக டெல்லி வந்த அஷ்ரஃப் கனிக்கு வருகை தந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பிரதமர் மோடியை, ஆஃப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கனி (ashraf ghani) சந்தித்து பேசினார்.
அப்போது இரு தரப்பு உறவு, பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் தாலிபன்களுடனான சமரச உடன்படிக்கை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆஃப்கனில் இந்தியா உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் உட்கட்டமைப்பு பணிகள் குறித்து இரு தலைவர்களும் அலோசனை நடத்தியதாக தெரிகிறது.
ஆஃப்கானிஸ்தானில், விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அஷ்ரஃப் கனியின் இந்திய பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
Discussion about this post