ஆம்புலன்ஸ் மூலம் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட வந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் தலைமறைவான ஒருவரை தேடி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்த கருப்புசாமி, அருண், அசோக் ஆகிய 3 பேர், உறவினருக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறி தனியார் ஆம்புலன்ஸ் ஒன்றை வாடகைக்கு எடுத்து சென்றுள்ளனர். 3 நாட்களாகியும் ஆம்புலன்ஸை திரும்பி வராததால் சந்தேகமடைந்த உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக அருணை கைது செய்து விசாரித்தில், வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 600 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து அருணை கைது செய்த காவல்துறையினர் அவர் கொடுத்த தகவலின் பேரில், அசோக்கையும் கைது செய்தனர். தலைமறைவாகியுள்ள கருப்புசாமியை தேடி வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு 70 லட்சம் ரூபாய் என்று காவல்துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மூவரும் ஆம்புலன்ஸ் பயன்படுத்தி ஆந்திராவிலிருந்து தொடர் கஞ்சா கடத்ததில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்ததுள்ளது.
Discussion about this post