பாகிஸ்தானின் முசாஃபராபாத் நகரில் நடந்த பேரணி ஒன்றில் காவல்துறையினர் நடத்திய தடியடியில் 2 பேர் உயிரிழந்தனர். 1947 ஆம் ஆண்டு காஷ்மீருக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் படைகள், பல ஊர்களை ஆக்கிரமித்து கொண்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கருப்பு தினமாக அனுசரித்து முசாஃபராபாத்தில் பேரணி நடந்தது. பேரணியில், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து செல்ல முயன்றனர்.
அப்போது, பேரணியை கலைக்க பாகிஸ்தான் காவல்துறையினர் தடியடி நடத்தினர். காவல்துறையினர் நடத்திய தடியடியில் 2 பேர் உயிரிழந்தனர். 80 பேர் படுகாயம் அடைந்தனர்.
Discussion about this post