கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பெருஞ்சாணி அணை வெள்ள அபாய அளவை எட்டியுள்ளதால், தாமிரபரணி மற்றும் பரளியாற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், பெருஞ்சாணி அணை அபாய அளவான 71 அடியை எட்டியுள்ளது. மழை தொடரும் பட்சத்தில், அணையின் நீர்மட்டம் 75 அடியை எட்டினால் உபரிநீர் அதிகளவில் வெளியேற்றப்படும். பரளியாற்றில் திறந்து விடப்படும் தண்ணீர் வலியாற்று முகம், அருவிக்கரை, திருவட்டார், மூவாற்றுமுகம், குழித்துறை மற்றும் தேங்காய்பட்டணம் வழியாக கடலில் கலக்கும். இதனால் பரளியாறு மற்றும் தாமிரபரணி ஆற்று கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
Discussion about this post