தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள அடர்ந்த காட்டுப்பகுதியிலிருந்து வெளியே வந்த ஒற்றைக் காட்டு யானை அப்பகுதிகளில் சுற்றித் திரிவதால், ஆபத்தை உணராமல் யாரும் செல்ஃபி எடுக்க வேண்டாமெனப் பொதுமக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், நொகனூர் காட்டுப்பகுதியிலிருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை அத்திக்கோட்டை என்னுமிடத்தில் சாலையைக் கடந்து தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்குள் நுழைந்துள்ளது. காட்டுயானையைக் கண்ட பொதுமக்கள் அதன் அருகில் சென்று புகைப்படம் எடுக்கின்றனர். ஆபத்தை உணராமல் யானை அருகில் சென்று யாரும் செல்ஃபி எடுக்க கூடாது என வனத்துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். தேன்கனிக்கோட்டை காட்டில் உள்ள ஒற்றை காட்டுயானை இரவுக்குள் சானமாவு வனப்பகுதிக்குச் செல்லலாம் என வனத்துறையினர் கணித்துள்ளனர்.
Discussion about this post