தமிழகத்தில் 16 மாவட்டங்களில் அடுத்த 24மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெருபாலான இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும், ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.வடகிழக்குப் பருவமழை அடுத்த 4 நாட்களுக்கு தொடரும் என்றும், பின்னர் படிப்படியாக அதிகரிக்கும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தமிழக பகுதியில் நகர்ந்து செல்லும் என்பதால், மழை தீவிரமாக வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு அரபிக் கடலை ஒட்டிய கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால், அடுத்த 3 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
Discussion about this post