ப.சிதம்பரம் ஜாமின் வழக்கில் டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவில் சில விளக்கங்கள் கோரி, உச்சநீதிமன்றத்தில் சிபிஐ மனுத்தாக்கல் செய்துள்ளது.
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ப.சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவுக்கு சி.பி.ஐ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ள நிலையில், சி.பி.ஐ தரப்பில், டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவில் விளக்கம் கோரி, உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளது. அதில் டெல்லி உயர்நீதிமன்றம் தனது உத்தரவில், சிதம்பரம் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுவிடுவார் என்றும், ஆதாரங்களை அழித்து விடுவார் என்றும் சி.பி.ஐ.யின் குற்றச்சாட்டுகளை டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்தது. எனவே, இது தொடர்பாக உச்சநீதிமன்றம் விளக்க வேண்டும் என சிபிஐ தனது மனுவில் கோரியுள்ளது.
Discussion about this post