திமுக ஆட்சிக் காலத்தில் தொல்லியல் துறைக்கு ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கவில்லை என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார். சென்னை தரமணியில் நடைபெற்ற உலக தமிழ் மாநாட்டில், தமிழ் அறிஞர்கள் பலருக்கு அமைச்சர் பாண்டியராஜன் விருது வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கீழடி அகழ்வாராய்ச்சி முடிவில் 5 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
Discussion about this post