சீன அதிபரின் தமிழக வருகையையொட்டி சந்திப்புக்கான ஏற்பாடுகளையும் மற்றும் பாதுகாப்பு பணிகளையும் மேற்கொள்ள 57 பொறுப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்திய பிரதமரும் சீனா அதிபரும் வரும் 11 மற்றும் 12 ஆம் தேதி மாமல்லபுரத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இந்த நிலையில் பாதுகாப்பு ஏற்பாடு மற்றும் விழா ஏற்பாடுகள் குறித்து பொதுத்துறை செயலாளர் செந்தில் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். ஆலோசனைக்குப் பின்னர், பாதுகாப்பு பணிகளுக்காக, 57 அதிகாரிகளின் பெயர்கள் கொண்ட பட்டியலை தலைமை செயலாளர் சண்முகம் வெளியிட்டார்.
சீன அதிபர் வந்திறங்கும் சென்னை விமான நிலையம், தங்கும் கிண்டி நட்சத்திர விடுதி முதல், சாலை மார்கமாக செல்லக்கூடிய இடங்கள் வரை பாதுகாப்பு பணி மற்றும் விழா ஏற்பாடுகளை கவனிப்பதற்காக இந்த சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
Discussion about this post