விஜயா, தேனா மற்றும் பாங்க் ஆப் பரோடா ஆகிய வங்கிகளை இணைக்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
பொதுத்துறை வங்கிகளை வலிமையாக்கும் வகையில் அவற்றை இணைக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பாரத ஸ்டேட் வங்கி மற்றும் அதன் துணை வங்கிகள் ஏற்கெனவே இணைக்கப்பட்டன. நிதிநிலையில் பலவீனமாக வங்கிகளை பெரிய வங்கிகளுடன் இணைப்பது பற்றி மத்திய அமைச்சரவையில் பரிசீலிக்கப்பட்டது.
அப்போது, எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், தேனா வங்கி, விஜயா வங்கி மற்றும் பாங்க் ஆப் பரோடா ஆகிய வங்கிகள் இணைப்புக்கு சாத்தியமானதாக கருத்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம் நாட்டின் 3வது பெரிய வங்கியாக பாங்க் ஆப் பரோடா திகழ உள்ளது. இந்த இணைப்பு மூலம் வங்கிகள் வலுவடையும் என்றும் அவற்றின் கடன் வழங்கல் தகுதி அதிகரிக்கும் என்றும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். இது, ஊழியர்களை எந்தவிதத்திலும் பாதிக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post