சித்தையன்கோட்டை பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத உற்சவத்தை முன்னிட்டு பெருமாள் கல்பவிருட்ச வாகனத்தில், தாயார்களுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகில் உள்ள சித்தையன்கோட்டையில் வரலாற்று சிறப்பு மிக்க பெருமாள் கோயில் பிரமோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்றது. பிரமோற்சவத்தை முன்னிட்டு, உற்சவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மேலும் உற்சவரான பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் சமேதரராக கல்பவிருட்ச வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த விழாவில் கோலாட்டம், கும்மி, நாதஸ்வர வாசிப்பு,செண்டை மேளம், கரகாட்டம் உள்ளிட்ட கிராமத்து கலைகள் நடைபெற்றன.தொடர்ந்து இன்று கருட வாகன சேவையும், திருவில்லிப்புத்தூரிலிருந்து ஆண்டாள் அணிந்திருந்த மாலை கொண்டு வரப்பட்டு, பெருமாளுக்கு சாற்றும் வைபவமும் நடைபெற உள்ளது.
Discussion about this post