முதியோர் நலனுக்காக இயற்றப்பட்ட சட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய தமிழக அரசுக்கு மத்திய அரசு விருது வழங்கியுள்ளது.
டெல்லியில் நடைபெற்ற விழாவில், குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழகத்திற்கான விருதை, சமூக நலத்துறை அமைச்சர் சரோஜாவிடம் வழங்கினார். விருதைப் பெற்ற பின் தமிழக சமூக நலத்துறை அமைச்சர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழக அரசு 20 முதியோர்களை கொண்டு தொடங்கி தற்போது 48 ஒருங்கிணைந்த முதியோர் இல்லங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது எனவும் ஒருங்கிணைந்த உணவு, குழந்தைகள் மானியம் 900-ஆக தற்பொழுது உயர்த்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
Discussion about this post