எல்லாருக்கும் வாழ்க்கையில் ஒரு முறையாவது lamborghini கார்-ல போகனும்னு ஆசை இருக்கும்.அப்படி என்னதான் lamborghini கார்-ல இருக்குனு நீங்களும் தெரிஞ்சிக்கோங்க.
lamborghini huracan சூப்பர் காரின் மேம்படுத்தப்பட்ட மாடல் கடந்த ஆண்டு இறுதியில் உலக அளவில் விற்பனைக்கு வந்தது. lamborghini huracan evo என்று இந்த மாடலுக்கு பெயர் வைத்துள்ளனர். இந்த கார் கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், lamborghini huracan evo காரின் திறந்து மூடும் கூரை அமைப்புடைய மாடலும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. lamborghini huracan evo ஸ்பைடர் என்று அழைக்கப்படும் இந்த மாடலானது வரும் 10ந் தேதி மும்பையில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சியில் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது.
அன்று முதல் இந்த புதிய கன்வெர்ட்டிபிள் ரக மாடலுக்கான முன்பதிவும் துவங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் வடிவமைப்பு, வசதிகள் மற்றும் செயல்திறனில் மிகச் சிறந்த சூப்பர் கார் மாடலாக விளங்குகிறது.
இந்த திறந்து மூடும் கூரை அமைப்புடைய மாடலின் முக்கிய சிறப்பாக, வெறும் 17 வினாடிகளில் கூரையானது எலெக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட் முறையில் மடக்கும் வசதிகொண்டது. இது நிச்சயம் வாடிக்கையாளர்களுக்கு கவரும் விஷயமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Discussion about this post