திருப்பதி ஏழுமலையான் கோயிலில், பிரம்மோற்சவ பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. முன்னதாக ஸ்ரீவெங்கடேஸ்வர பெருமாளின் சர்வ சேனாதிபதியான விஷ்வ சேனர், வசந்த மண்டபத்திற்கு நாதஸ்வரங்கள் முழங்க, கோயிலில் இருந்து ஊர்வலமாக வந்தார். பின்னர், கோயில் அர்ச்சகர்கள், மண்ணை கோயிலுக்கு கொண்டு வந்து யாகசாலையில் 9 பானைகள் வைத்து, நவதானியங்கள் செலுத்தி, முளைகட்டும் பூஜையான அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. இதையடுத்து, கோயில் தங்க கொடிமரத்தில், வேத மந்திரங்கள் முழங்க பிரம்மோற்சவ கொடி ஏற்றப்பட்டது.
Discussion about this post