2016ம் ஆண்டு முதல், உதகையில் உள்ள கட்சி அலுவலக கட்டடத்திற்கு திமுக வரி செலுத்தாததால் வரி கேட்பு அறிவிப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகையில், திமுக கட்சி அலுவலகமான கலைஞர் அறிவாலயம் கட்டடத்திற்கு, கடந்த 2016ம் ஆண்டு முதல் செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம் வரி மற்றும் புதை சாக்கடை கட்டணம் வரி ஆகியவற்றை நகராட்சிக்கு செலுத்தாமல் அக்கட்சி நிர்வாகிகள் மெத்தன போக்கை காட்டி வருகின்றனர்.
2016ம் ஆண்டு முதல் இன்று வரை 43 ஆயிரத்து 128 ரூபாய் வரித் தொகையை, திமுக நகராட்சிக்கு செலுத்தவில்லை. பலமுறை நோட்டீஸ் அனுப்பியும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவின் பெயரை சொல்லி அக்கட்சியினர் மிரட்டுவதாக புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து, திமுகவிற்கு மாவட்டம் நிர்வாகம் சார்பில், மீண்டும் வரி கேட்பு அறிவிப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்தநிலையில், நீலகிரி மாவட்ட செயலாளர் முபாரக் மற்றும் மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார் ஆகியோர் கட்சி உறுப்பினர்களுக்கு கட்சியில் பதவி வாங்கி தருவதாக கூறி லட்சக் கணக்கில் பணம் பெற்று கொண்டு ஏமாற்றி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கட்சி உறுப்பினர்கள் விளக்கம் கேட்கும்போது ஆ.ராசாவின் பெயரை சொல்லி அவர்கள் மிரட்டுவதாகவும் புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக பலமுறை திமுக தலைவர் ஸ்டாலினிடம் புகார் அளிக்கப்பட்டும் எந்த பயனும் இல்லை என்று அக்கட்சி உறுப்பினர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
சொந்த கட்சியினரிடமே ஏமாற்றும் கட்சி நிர்வாகிகளை கண்டுகொள்ளாத ஸ்டாலின் கட்சி அலுவலகங்களின் வரி ஏய்ப்பு செய்ததற்கு என்ன பதில் சொல்லப்போகிறார் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
Discussion about this post