பிரதமர் மோடியின் 68 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
இதில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்த போதுதான் மக்கள் மீது அதிக சுமை ஏற்றப்பட்டதாக குற்றம்சாட்டினார்.
காங்கிரஸ் அரசை தவிர வேறு எந்த அரசும் மக்கள் மீது இவ்வளவு சுமையை ஏற்றி இருக்கமாட்டார்கள் என்றார் அவர்.
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்று கூறிய பொன். ராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற தேர்தல் எப்போது வந்தாலும் அதனை சந்திக்க பாஜக தயாராக உள்ளது என்றும் தெரிவித்தார்.
Discussion about this post