விழுப்புரம் அருகே குடிபோதையில் இளைஞரை வெட்டிக் கொன்றவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
விழுப்புரம் அடுத்த கெங்கராம்பாளையத்தைச் சேர்ந்தவர் அய்யப்பன். இவர் மது அருந்திவிட்டுச் சாலையில் வந்த வாகனங்களை மடக்கி அச்சுறுத்தியுள்ளார். இதனையடுத்து பக்கத்து வீட்டுக்காரான தணிகைராஜ், அவரைத் தட்டிக்கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அய்யப்பன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் தணிகைராஜை வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த தணிகைராஜை, அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். செல்லும் வழியிலேயே தணிகைராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அய்யப்பனைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Discussion about this post