கடன் கொடுத்தவர்கள் வீட்டின் முன் வந்து, கெட்ட வார்த்தையில் திட்டியதால், விசைத்தளி தொழிலாளி, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள காட்டூர் பகுதியை சேர்ந்தவர் ராஜூ . விசைத்தறி தொழிலாளியான இவருக்கும் விசாலாட்சி என்பவருக்கும் கடந்த 25 வருடங்கள் முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். குடும்பம் நடத்துவதற்கு போதிய வருமானம் இல்லாததால் விசாலாட்சி , மைக்ரோ பைனான்ஸ் நிதி நிறுவனங்களில் மகளிர் குழுக்கள் மூலம் கடன் பெற்றுள்ளார்.
அவற்றிற்கு கடனை திரும்ப செலுத்த முடியாததால் அருகில் வசிப்பவர்கள் இடமும் பிற நிதி நிறுவனங்களிலும் வட்டிக்கு பணம் பெற்றுள்ளதாக தெரிகிறது.
நாளடைவில் மைக்ரோ பைனான்ஸ் மற்றும் நிதிநிறுவனங்களில் பெற்ற கடனை திருப்பி செலுத்த முடியாததால் நிதி நிறுவன ஊழியர்களும் அண்டை வீட்டாரும் தினசரி ராஜு மற்றும் விசாலாட்சி இடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
அதேபோல் கடன் கொடுத்தவர்கள், மைக்ரோ பைனான்ஸ் ஊழியர்கள் ராஜு வீட்டு முன்பு நின்று தகாத வார்த்தைகளில் பேசியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த ராஜு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Discussion about this post