தேர்வு விடைத்தாள்களைக் கணினி முறையில், திருத்தம் மற்றும் மதிப்பீடு செய்யப் பள்ளிக்கல்வித் துறை ஆலோசனை செய்து வருகிறது.
தமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்குப் பிறகு கோடை விடுமுறை நாட்களில் ஆசிரியர்களை வைத்து விடைத்தாள்களைத் திருத்தும் பணிகள் வழக்கமாக நடைபெற்று வருகிறது. மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களைக் கணக்கிட்டு, கூட்டு மதிப்பெண்ணை எழுத அதிக நேரமாவதுடன், ஆசிரியர்களின் வேலைப் பளு அதிகமாகிறது. இதனைக் கருத்தில் கொண்டு மடிக்கணினியைப் பயன்படுத்தி மாணவர்களின் மதிப்பெண் கூட்டுத்தொகையைக் கணக்கிடும் திட்டத்தைக் கொண்டு வரப் பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தைச் செயல்படுத்துவது தொடர்பாகக் கணினி வல்லுநர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை நடத்தி வருகிறது.
Discussion about this post