திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விதி மீறலில் ஈடுபட்ட திமுக எம்.எல்.ஏவால் மனு அளிக்க வந்த பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. பொதுமக்கள் மக்கள், தங்கள் பகுதிகளில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வருகை தந்தனர். அப்போது அங்கு வந்த திமுக எம்எல்ஏ வும் கிழக்கு மாவட்ட செயலாளருமான ஐ.பி.செந்தில்குமார் நூற்றுக்கும் மேற்பட்டோரை தன்னுடன் அழைத்து வந்தார். இதனால் முன்னதாகவே வந்திருந்து மனுவுடன் காத்திருந்த பொதுமக்களுக்கு பெறும் இடையூறு ஏற்பட்டது. ஆட்சியரை சந்திக்க 4 அல்லது 5 நபர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என காவல்துறையினர் எடுத்துக் கூறியும், விதிகளை மீறி செயல்பட்ட திமுக எம்.எல்.ஏவால் பலரும் கடும் அவதிக்குள்ளாகினர். இதனையடுத்து அராஜக செயலில் ஈடுபட்ட திமுகவினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Discussion about this post